பொது செய்தி

தமிழ்நாடு

டீ, காபிக்கு மாற்றுக்கு நல்ல வரவேற்பு!

Added : பிப் 09, 2020
Advertisement
 டீ, காபிக்கு  மாற்றுக்கு நல்ல வரவேற்பு!

காபி, டீக்கு மாற்றாக, இயற்கையான மூலிகை டீ பாக்கெட்டுகளை தயாரிக்கும், வள்ளியம்மை அருணாசலம்: பூர்வீகம் காரைக்குடி. காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவு செய்த போது, பிறரை போலவே, நானும் மாற்று தேடினேன். வேலை பார்க்கிற இடங்களில், டீ, காபி தான் கிடைக்கும். அது வேண்டாம் என்றால், பால் கிடைக்கும் அல்லது சூடான தண்ணீர் தான். அப்போது தான், சூடான தண்ணீரில் முக்கி குடிப்பது போல, மூலிகை டீ பைகளை தயாரிக்கலாமே என முடிவு செய்தேன்.

சங்குப்பூ, துளசி, முருங்கை, நித்ய கல்யாணி, தொட்டாச் சிணுங்கி, ஆவாரம்பூ, லெமன் கிராஸ் என, எழு வகைகளில், டீ பை தயாரித்தேன். ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பதால், சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தயாரிப்பு பணிகளில் இறங்கினேன். சங்குப்பூ, பெண்களுக்கு நல்லது. முருங்கையின் பலன்கள், அனைவருக்கும் தெரிந்தது. சளி, இருமல் பிரச்னை களை தீர்க்க, துளசி நல்லது. நித்ய கல்யாணி, சிறுநீரக ஆரோக்கியத்திற்கானது. தொட்டாச்சிணுங்கி, உடல் பலம் தரும். ஆவாரம் பூ, நீரிழிவு நோயை குணப்படுத்தும். லெமன் கிராஸ், உடல் எடையை குறைக்கும்.இவ்வாறு, ஒவ்வொரு மூலிகைக்கு, வெவ்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதை அறிந்து, சித்த மருத்துவர்கள் ஆலோசனை படை, டீ பை தயாரித்தேன்.

அவற்றை, மற்றவர்களுக்கு புரிய வைக்க, துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், ஒரு முறை இந்த டீ பையை பயன்படுத்தியவர்கள் பிடித்து, மீண்டும் வாங்க ஆரம்பித்தனர். இப்போது நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த மூலிகை டீ பையை வாங்கி, சூடான நீரில் முக்கி, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டியது தான். இதனால், பலன் கிடைத்தவர்கள் தொடர்ந்து அருந்தத் துவங்கினர். குறிப்பிட்ட பிரச்னை இருப்பவர்கள் மட்டுமின்றி, ஆரோக்கியம் விரும்பிகளும் இந்த டீ பையை பயன்படுத்த துவங்கினர்.இவற்றில் செயற்கை மணமோ, நிறமோ, ரசாயனங்களோ இல்லை என்பதால், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம். மூலப் பொருட்களை வாங்கி, வீட்டில் உலர்த்தி, பொடியாக ஆக்குகிறோம்.

இதற்கு ஒரு வாரம் பிடிக்கும். மூலிகைகளை உலர்ந்த நிலையில் வாங்க வேண்டும் என்றால், வேலை ஒரே நாளில் முடிந்து விடும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவு கண்காட்சிகள், ஆர்கானிக் பொருட்கள் விற்கும் இடங்கள், அலுவலகங்களில் இவற்றை சப்ளை செய்கிறோம். விற்பனைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். டீ, காபிக்கு மாற்றாக பருக நினைப்பவர்கள், ஆர்வமாக வாங்குவர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X