பரம ரகசியம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 09, 2020
Share
Advertisement
கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஆளும் கட்சி எம்.பி.,க் களும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவே இல்லை. இந்த திடீர், அதிரடி அறிவிப்பிற்கு, எதிர்ப்பு தெரிவிக்க கூட எதிர்க்கட்சியினருக்கு நேரம் கிடைக்கவில்லை. மோடி என்ன சொன்னார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்குள், அவர் பேசிவிட்டு
டில்லி உஷ், மோடி, ராமர் கோயில், ராமர்கோவில், அறக்கட்டளை, பிரதமர்மோடி, மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், நிர்மலா,  எம்.பி., திமுக, தி.மு.க., ராகுல், ராகுல்காந்தி, பராசரன்,கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஆளும் கட்சி எம்.பி.,க் களும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவே இல்லை. இந்த திடீர், அதிரடி அறிவிப்பிற்கு, எதிர்ப்பு தெரிவிக்க கூட எதிர்க்கட்சியினருக்கு நேரம் கிடைக்கவில்லை. மோடி என்ன சொன்னார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்குள், அவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ராமர் கோவில் கட்ட டிரஸ்ட் துவக்கப்பட்டதையும், அதில், 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதையும் தான் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு படு ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கூட பிரதமர் என்ன பேசப்போகிறார் என்பது தெரியாது. ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும; அதற்கு சபாநாயகர் அனுமதி வேண்டும் என மட்டுமே அவரிடம் சொல்லப்பட்டது.இந்த செய்தியை அறிவிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான், விஷயம் மத்திய அமைச்சர்களுக்கே தெரிய வந்தது. காரணம், மத்திய அமைச்சரவை தான் இந்த டிரஸ்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டம், பார்லிமெண்ட் வளாகத்திலேயே நடைபெற்றது. அப்போதுதான், மோடி இதைப் பற்றி சொன்னார். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும்,நேராக லோக்சபாவிற்கு சென்று அறிவித்துவிட்டார் மோடி.டிரஸ்ட் சம்பந்தப்பட்ட விஷயம், முன்பே தெரிந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பிரச்னை எழுப்புவார்கள் என்பதால், மோடி ரகசியம் காத்தார்.இந்த டிரஸ்டின் முதல் உறுப்பினர், தமிழகத்து பெரியவர் கேசவன் பராசரன், 92. இந்தியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரல். உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கில், ராமருக்காக வாதாடி வெற்றி பெற்றவர். ராமர் கோவில் டிரஸ்டில் உறுப்பினராக, பராசரன் முதலில் தயங்கினாராம். ஆனால், பிரதமர் மோடி, பராசரன் மகன் மோகனிடம், 'அப்பாவை, எப்படியாவது சம்மதிக்க வைத்து விடுங்கள்' என, கேட்டுக் கொண்டாராம். பிரதமர் மற்றும் மகனின் அன்பினால், சீனியர் பராசரன் ஒத்துக் கொண்டார். டில்லியில் உள்ள பராசரன் வீடுதான், இந்த டிரஸ்டின் அலுவலகமாக செயல்பட உள்ளது.


யார் அந்த காங்., எம்பி?தேர்தலில், அரசியல் கட்சிகளுக்கு பிரசார உத்திகளை சொல்லித்தருவது, சமூக வலைதளங்களில் எப்படி பிரசாரம் செய்வது என்பது போன்ற வேலைகளை செய்ய, தனியார் நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில், தி.மு.க., இப்படி ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. வரும், 2021ல், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு, இந்த நிறுவனம் தி.மு.க.,விற்கு உதவும். இதே போல, குஜராத்தில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர், காங்., முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து, தன் நிறுவனம் பற்றியும், காங்கிரசுக்கு பணியாற்ற தயாராக இருப்பது பற்றியும் சொல்ல விரும்பினார். தனியாகச் சென்று ராகுலின், 'அப்பாயிண்ட்மெண்ட்' கேட்டால் கிடைக்காது என்பதால், காங்., பிரபலங்கள் மூலமாக முயற்சி செய்தார்.தமிழக காங்.,- எம்.பி., ஒருவர், இவருக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். உடனே, அந்நிறுவனத்தின் தலைவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 'ராகுல், 'அப்பாயின்ட்மென்ட்' வேண்டும் என்றால், தனக்கு கணிசமான தொகை தர வேண்டும்' என, அந்த எம்.பி., கேட்டாராம்.ராகுலை சந்தித்தால் போதும் என்பதால், தமிழக எம்.பி., கேட்ட கரன்சி கட்டுகளை, அந்நிறுவனத்தின் தலைவர் தந்திருக்கிறார். சந்திப்பு எப்போது என கேட்டதற்கு, விரைவில் என, அந்த எம்.பி. பதில் சொல்லியிருக்கிறார். ஒரு வாரம், இரண்டு வாரம் என, காத்திருந்து தான் மிச்சம். எதுவுமே நடக்கவில்லை. உடனே அந்த நபர், எம்.பி.,க்கு போன் செய்திருக்கிறார். மணி அடித்துக் கொண்டேயிருந்தது; அவர் போனை எடுக்கவேயில்லை. அடுத்த சில நாட்களும், நிறுவனத்தின் தலைவர் முயற்சித்திருக்கிறார்.
எந்த பலனும் இல்லை. மறுபடி போன் செய்தால், விரைவில் சந்திப்பு நடக்கும் என, அந்த எம்.பி., சாக்கு போக்கு சொல்வார் எனக்கருதி, பணம் போனால் போகட்டும் என விட்டுவிட்டாராம்.


நச்சரிக்கும் மோடி!டில்லியின் சீனியர் அதிகாரிகள், குறிப்பாக பிரதமர் மோடியின் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள், எப்போதும், பதற்றத்திலேயே இருக்கின்றனர். 'பிரதமரின் திட்டங்கள் அருமை; ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள் எங்களை ஒருவழி செய்து விடுகிறார்' என்கின்றனர் இந்த அதிகாரிகள்.'எந்த ஒரு திட்டம் போட்டாலும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்வார் மோடி. அதோடு, அத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய நாளிலிருந்து, அதன் வளர்ச்சி குறித்து விசாரித்துக் கொண்டேயிருப்பார். 'இதனால் தான், 2014ல் மோடி கொண்டு வந்த பெரும்பாலான திட்டங்கள், 2019ல் தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டன. 'இதன் மூலம் மோடி மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார்' என்கின்றனர் அந்த அதிகாரிகள்.இந்திய பிரதமர்கள் சம்பந்தமான ஒரு அருங்காட்சியகம் அமைக்க, மோடி முடிவு செய்தார். இது தொடர்பான அறிவிப்பை, கடந்த ஆண்டு வெளியிட்டார். டில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் இந்த அருங்காட்சிய கம் அமைக்கப்படும். இதில் பிரதமர்களின் சிலைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் இருக்கும்.இது தொடர்பாக, அடிக்கடி, 'மீட்டிங்' போட்டு, ஒவ்வொரு பிரதமரின் சிலையும் எப்படி இருக்க வேண்டும், என ஆலோசனைகளை வழங்கி வருகிறார் மோடி. இதற்காக, முன்னாள் பிரதமர்களின் புகைப்படங்களைப் பார்த்து, நின்ற நிலையில் சிலைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். 2021ல் இந்த அருங்காட்சியகத்தை திறக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 'பிரதமர் மோடி எங்களை நச்சரித்தாலும், கடைசியில் திட்டம் குறித்த நேரத்தில் நிறைவேறுகிறது என்பதில் மகிழ்ச்சிதான்' என்கின்றனர் அதிகாரிகள்.


நினைவூட்டிய நிர்மலா


'இரண்டரை மணி நேரத்திற்கு பட்ஜெட் உரையைப் படித்து, போரடித்து விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்' என, அனைவரும் சொன்னாலும், ஒரு பெரிய விஷயத்தை அமைதியாக சாதித்துள்ளார் அவர். பட்ஜெட் உரையில், காஷ்மீரின் மிகச் சிறந்த கவிஞர் தீன நாத் கவுலின் கவிதையைப் படித்தார். இந்தக் கவிதை 1946ல் எழுதப்பட்டது. 'அரசு எதைச் செய்தாலும், அது மக்களின் நன்மைக்கே' என இந்த கவிதை சொல்கிறது.இந்த கவிதையை, ஷாரதா மொழி எழுத்திலேயே பட்ஜெட் பேப்பர்களில் அச்சிட வேண்டும் என சொல்லிவிட்டார் நிர்மலா. ஆனால் அதிகாரிகளோ, இந்த எழுத்து கம்ப்யூட்டரில் கிடையாது; அச்சிட முடியாது என்றனர். ஆனால் நிர்மலா வலியுறுத்தியதால், இந்தக் கவிதை, ஷாரதா எழுத்திலேயே, பட்ஜெட் உரையில் அச்சிடப் பட்டது.ஷாரதா எழுத்துக்களை, காஷ்மீர் மக்கள் மறந்தாலும், நாங்கள் மறக்கவில்லை என்பதை காட்டவும், இந்த எழுத்துக்கள், இந்தியாவின் கலாசாரம் என்பதை நிரூபிக்கவும், இப்படி செய்தாராம் நிர்மலா. இதை அறிந்த பிரதமர் மோடி, நிர்மலாவைப் பாராட்டி தள்ளிவிட்டாராம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X