சிறுமியின் திருமணம் செல்லும் பாக்., கோர்ட் அடாவடி தீர்ப்பு

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கராச்சி: பூப்பெய்துவிட்டதால், 14 வயது கிறிஸ்துவ சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம், ஷரியத் சட்டப்படி செல்லும் என, பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிறுமியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.அண்டை நாடான பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில், யூனிஸ் - நகீனா மாசி என்ற கிறிஸ்துவ தம்பதி வசிக்கின்றனர். அவர்களின், 14 வயதான மகள் ஹூமா, கடந்த அக்டோபரில், அப்துல் ஜப்பார் என்பவரால் கடத்தப்பட்டார். இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்ட ஹூமாவை, அப்துல் கட்டாய திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து, 18 வயது ஆகாத தங்கள் மகளை, கட்டாய திருமணம் செய்துகொண்ட அப்துலுக்கு எதிராக, சிறுமியின் பெற்றோர், சிந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி முறையிட்டனர். அந்த வழக்கை, 3ம் தேதி விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதிகள், முகமது இக்பால் கல்ஹோரோ மற்றும் இர்ஷாத் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'ஹூமா, மைனராக இருந்தாலும், அவர் பூப்பெய்தி விட்டார். அவருக்கு முதல் மாதவிடாய் சுழற்சி வந்த போதே, சிறுமி பருவத்தை கடந்துவிட்டார். ஆகையால், ஷரியத் சட்டப்படி, அவருக்கு நடந்த திருமணம் செல்லுபடியாகும்,' என, தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் தபசும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 2014ம் ஆண்டின், சிந்து மாகாண குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை, மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், இந்த வழக்கில் நீதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
09-பிப்-202023:28:44 IST Report Abuse
Milirvan ஆறு வயது குழந்தையை நிக்கா செய்து எட்டு வயதில் அக்குழந்தையை டண்டணக்கா செய்த இரைதூதனை நியாய படுத்துபவன்கள் வேறு எப்படி தீர்ப்பு கூறுவான்களாம்..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X