நெற்றிக்கண்ணுடன் நாய்க்குட்டி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
நெற்றிக்கண்ணுடன் நாய்க்குட்டி

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், சாசோயேங்சாவ் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சோம்ஜாய் பம்மனன் என்பவரின் நாய், கடந்த பிப்ரவரி, 2ம் தேதி, இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில், ஒரு நாய் குட்டியின் நெற்றியில் ஒரே ஒரு கண் மட்டும் இருந்ததை கண்டு, அவர் அதிர்ச்சியடைந்தார். எனினும், அந்த நாய்க்குட்டி நல்ல உடல்நலத்துடன் உள்ளது. 'மினியன்ஸ் கார்டூனில்' உள்ள கெவின் மினியன் போன்றே, ஒற்றை கண்ணுடன் அந்த நாய்க்குட்டி இருப்பதால், அதற்கு கெவின் என்ற பெயரை அவர் சூட்டினார். கிராமவாசிகள், அந்த நாய்க்குட்டியை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X