பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஏழு பேர் பலி

Added : பிப் 09, 2020
Advertisement
 பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஏழு பேர் பலி

பெலகாவி: கர்நாடக மாநிலத்தில், டிராக்டர், 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, கரும்பு அறுவடை செய்ய சென்ற, ஒரே கிராமத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.

பெலகாவி மாவட்டம், பேகூர் கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கரும்பு அறுவடை செய்வதற்காக, இட்டகி கிராமத்துக்கு நேற்று அதிகாலை, டிராக்டரில் புறப்பட்டனர்.இட்டகி கிராமத்தை நெருங்கும் போது, துாக்க கலக்கத்தில் இருந்த டிராக்டர் ஓட்டுனர், தாறுமாறாக ஓட்டினார். கட்டுப்பாட்டடை இழந்த டிராக்டர், வழியில் இருந்த, 50 அடி ஆற்று பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்ததால், அக்கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X