சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

Added : பிப் 09, 2020
Advertisement

மீனம்பாக்கம்: மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டைச் சேர்ந்தவர், ஜெபசிங், 35; தனியார் நிறுவன ஊழியர். சில நாட்களுக்கு முன், மீனம்பாக்கம், பஜார் சிக்னல் அருகே, தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது, வாகனம் மாயமாகியது. மீனம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்டதில், இருசக்கர வாகனத்தை திருடியது, பொழிச்சலுாரைச் சேர்ந்த தேவராஜ், 42, என, தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார், தேவராஜை கைது செய்தனர்.
பணம் பறித்தவர்களுக்கு, 'காப்பு'
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர், சேம், 22; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 20, அவரது தாய்மாமன் முருகன், 40, ஆகியோர் சேர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி, சேமிடம் பணம் பறித்துள்ளனர். செம்மஞ்சேரி போலீசார், நேற்று, கார்த்திக், முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவியை தாக்கிய ரவுடிக்கு, 'கம்பி'
அடையாறு: ஈஞ்சம்பாக்கம், கவுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், சுரேஷ், 38; லாரி ஓட்டுனர். மனைவி கிரேசி, 35. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரவுடியான சுரேஷ் மீது, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு மற்றும் மூன்று போக்சோ வழக்குகள் உள்ளன. குடித்து விட்டு மனைவி, குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கிரேசி, குழந்தைகளுடன் தனியாக சென்று வசித்த பிறகும், கொடுமை குறையவில்லை. கிரேசி புகாரில், அடையாறு மகளிர் போலீசார், நேற்று, சுரேஷை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
கோவில் உண்டியல் உடைப்பு
செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், கங்கை அம்மன் கோவில் பூசாரி கார்த்திக், நேற்று காலை, 7:00 மணி அளவில், கோவிலை திறக்க சென்றார். அப்போது, மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து, அதில் இருந்த, காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X