மாநிலங்கள் விரும்பினால் ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசல் ; நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (3+ 9)
Advertisement
மாநிலங்கள் # விரும்பினால் ஜி.எஸ்.டி.,பெட்ரோல், டீசல் ; நிர்மலா சீதாராமன் #

சென்னை : ''அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து விருப்பம் தெரிவித்தால் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து சென்னையில் நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தும் அம்சங்கள் பட்ஜெட்டில் இல்லை. நிதி ஒதுக்கீடு செய்வதில் எந்த மாநிலமும் தனித்து விடப்படுவதில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கான நிலுவை தொகை இரு தவணைகளில் விரைவாக வழங்கப்படும். பள்ளி கல்வியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் புதிதாக அறிவிக்கவில்லை.நிதி உதவி அளிக்கும் 'பிரதமரின் கிசான்' திட்டத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கும் திட்டமாக உள்ளது.குறு சிறு நிறுவனங்களுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவை தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்கவில்லை.எல்.ஐ.சி. நிறுவனத்தில் எத்தனை சதவீத பங்கு விற்பனை என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அதன் பங்குகள் நாட்டு மக்களுக்கு தான் விற்கப்பட உள்ளன.

இதனால் எல்.ஐ.சி. நிர்வாகம் மேலும் பொறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்படும். நாமும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் என மக்களும் பெருமை கொள்வர்.ஜி.எஸ்.டி. வரி வசூலில் சில சரிவுகள் இருந்தன. அவை தற்போது சரிசெய்யப்பட்டு உள்ளன. இதனால் 2019 நவம்பரில் 1.04 லட்சம் கோடி ரூபாய்; டிசம்பரில் 1.03 லட்சம் கோடி ரூபாய்; இந்த ஆண்டு ஜனவரியில் 1.11 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. எளிமையாக வரி செலுத்த விரைவில் புதிய நடைமுறை அறிவிக்கப்படும்.

மக்களிடம் அதிக பணம் இருப்பதற்காக தான் வரி குறைக்கப்படுகிறது. அந்த பணத்தில் அவர்கள் வீடு வாகனம் என எதை வாங்க வேண்டும் என்று அரசு ஆலோசனை தருவது சரியாக இருக்காது.விவசாயத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கியதாக கூறுவதை ஏற்க முடியாது. விவசாயம் கிராமப்புற மேம்பாட்டிற்காக மட்டும் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில நிதிக் குழுவின் பரிந்துரைகளின் படி அனைத்து மாநிலங்களுக்கும் 42 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.

எந்த மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை.துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசுடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இதுவே மக்களுக்கு ஒரு சேமிப்பாகும். ஊட்டச்சத்து மானியம் குறைக்கவில்லை.அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருங்கிணைந்து விருப்பம் தெரிவித்தால் பெட்ரோல், டீசல் விற்பனை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalam - Salem,இந்தியா
09-பிப்-202014:00:10 IST Report Abuse
Kalam கரோனா வைரஸ் தாக்கிய பின் கச்சா எண்ணை சுமார் பதினைந்து பெர்ஸன்ட் குறைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன் . ஆனா பெட்ரோல் விலை அதே பெர்ஸண்டாஜ் குறைஞ்சிராக்கா ? இதை செய்ய்யுங்க முதல்ல . The percent in petrol price is not following the same pace as that of crude oil
Rate this:
Share this comment
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
09-பிப்-202010:14:35 IST Report Abuse
Mirthika Sathiamoorthi ஹஹஹஹ,,,ஐயோ ஐயோ சிரிப்பு தாங்க முடியலை...ஹஹஹஹஹ்....முடியலை...இப்படி வாய் விட்டு சிரிச்சு எவ்வளவு நாளாச்சு..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-பிப்-202008:34:13 IST Report Abuse
ஆரூர் ரங் மத்திய அரசே கட்டாயப்படுத்தினாலும் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்காது.ஏற்பதும் நல்லதில்லை .உணவுப்பொருட்கள் தவிர்த்த எந்த இறக்குமதி பண்டத்துக்கும் 50 % கு குறைவான வரி வேண்டாம் . அது நுகர்வை கடுமையாக அதிகரித்து ரூபாயின் மதிப்பை பாதாளத்தில் தள்ளும். .வாகனப்பெருக்கம் வியாதிகளின் துவக்கம் என்பதை டெல்லி காட்டிவிட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X