ஹபிஸ் சயீத் கோரிக்கை ஏற்பு தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

Added : பிப் 09, 2020
Advertisement
 ஹபிஸ் சயீத் கோரிக்கை ஏற்பு தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

லாகூர்; பாகிஸ்தானில், பயங்கரவாத குழுக்களுக்கு, ஹபிஸ் சயீத் நிதியுதவி செய்த வழக்குகளை விசாரித்து வரும் லாகூர் நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பை ஒத்திவைத்தது.

கடந்த, 2008ம் ஆண்டு, மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, மூளையாக செயல்பட்டவர் ஹபிஸ் சயீத். ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவரான சயீத், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான இரண்டு வழக்குகளின் விசாரணை, லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹபிஸ் சயீத், நீதிபதியிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீதிபதி புட்டாவிடம், ஹபிஸ் சயீத், கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த புகாரில், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படவேண்டும்; அவற்றின், விசாரணை நிறைவடைந்த பின் தான், தீர்ப்பு வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.

சயீத்தின் கோரிக்கையை எதிர்த்த, எதிர் தரப்பு வழக்கறிஞர்,'சட்டப்படி, இந்த வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கலாம்,' என்றார்.எனினும், நீதிபதி தீர்ப்பை வழங்காமல், வழக்கு விசாரணையை, நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.மேலும், சயீத் மனு தொடர்பாக, இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பி வைக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X