கண்டன தீர்மானத்திற்கு சாட்சி 2 அதிகாரிகளுக்கு டிரம்ப், 'கல்தா'

Added : பிப் 09, 2020
Advertisement

வாஷிங்டன்: தனக்கு எதிரான கண்டன தீர்மானம் மீது சாட்சியம் அளித்த இரண்டு அதிகாரிகளை, பதவியில் இருந்து நீக்கி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக, எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ள பிரதிநிதிகள் சபையில், இது தொடர்பான விசாரணை நடந்தது. அப்போது, சில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்த தீர்மானம், டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ள, செனட் சபையில் சமீபத்தில் தோல்விஅடைந்தது.இந்நிலையில், பிரதிநிதிகள் சபை விசாரணையின் போது, சாட்சியம் அளித்த இரண்டு அதிகாரிகளை, பதவியில் இருந்து நீக்கியுள்ளார், அதிபர் டொனால்டு டிரம்ப்.ஐரோப்பிய யூனியனுக்காக அமெரிக்கத் துாதராக பணியாற்றிய கார்டன் சோன்ட்லாண்ட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதேபோல், ராணுவ உயரதிகாரியான அலெக்சாண்டர் விண்ட்மானும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில், உக்ரைன் நிபுணராக பணியாற்றி வந்தார்.இதற்கிடையே, அலெக்சாண்டர் விண்ட்மானின் இரட்டை சகோதரரான, தேசிய பாதுகாப்பு கவுன்சில் உயரதிகாரி, லெப்டினென்ட் கர்னல் யேவ்ஜெனி விண்ட்மானும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.'இது பழிவாங்கும் நடவடிக்கை' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X