கடல் மேல் காற்றாலை! ஜப்பான் கலக்கல் திட்டம்

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement
கடல் மேல் காற்றாலை! ஜப்பான் கலக்கல் திட்டம்

ஜப்பானின் மின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டதால், மாற்று வழிகளை தேடுகிறது. கடல் மேல் மிதக்கும் காற்றாலை அமைத்து மின் உற்பத்தி செய்ய புதிதாக திட்டமிட்டுள்ளது.

ஜப்பானை 2011ல் சுனாமி, நிலநடுக்கத்துடன் கூடிய பேரலைகள் தாக்கின. இதில், புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைய, கதிர்வீச்சு அபாயத்தால் மூடப்பட்டது. இச்சம்பவத்திற்கு பின் உலக நாடுகள் அணு மின் நிலையங்களின் உற்பத்தியை குறைத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளன. இதே பாணியை ஜப்பானும் பின்பற்ற உள்ளது. இங்கு நிலப்பரப்பு குறைவு என்பதால், கடல் மேல் மிதக்கும் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்க உள்ளது.


முதலில் ஸ்காட்லாந்து


கடல் மட்டத்துக்கு மேலே காற்று அதிவேகமாக வீசும். இங்கு காற்றாலை நிறுவினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். பாரம்பரிய அனல் மின்சாரம், நீர் மின்சார உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் செலவு குறைவு. நிலப்பகுதிகள் குறைந்த நாடுகளில் கூட கடலில் மிதந்து கொண்டே, காற்றின் சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து கடல்பகுதியில் 2017ல் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை அமைக்கப்பட்டது. நார்வே, போச்சுக்கல் உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலும் கடலில் காற்றாலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ஜப்பானை பொறுத்தவரை ஆழமான கடற்பகுதி சாதகமான விஷயம். தலைநகர் டோக்கியோவுக்கு கிழக்கே உள்ள சோஷி நகர கடல் பகுதியில் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் ஹோல்டிங்ஸ் மற்றும் டென்மார்க்கின் ஆர்ஸ்டட் நிறுவனங்கள் சேர்ந்து காற்றாலை அமைக்கும் பணியை துவங்கியுள்ளன. 2024ல் 370 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் வெளியிட்ட அறிக்கையில், 'ஐரோப்பா, வடஅமெரிக்க கடல் பகுதியில் இருந்து ஆசியாவுக்கு கவனம் மாறியுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான் தைவான் கடல் பகுதியில் 2050ல் 613 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்ப்பு


ஜப்பானின் யுனிவர்சல் எனர்ஜி ஆய்வு மையத்தின் டகேஷி கனேடா கூறுகையில்,''ஐரோப்பிய கடல் பகுதிகள் அமைதியானவை. ஜப்பானில் அடிக்கடி புயல், சுனாமி, நிலநடுக்கம் ஏற்படும். காற்றாலை அமைப்பதால், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்,''என, எச்சரித்தார்.


இந்தியா எப்படி


மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,' தமிழகம், குஜராத் கடல் பகுதிகளில் காற்றாலை மூலம் 70 'ஜிகாவாட்' மின் உற்பத்தி செய்யலாம். குஜராத்தின் கும்பாட் பகுதியில் 1 'ஜிகாவாட்' திறன் கொண்ட காற்றாலை அமைக்க உள்ளோம்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் காற்றாலை திட்டங்கள் அமலுக்கு வந்தால், மின்மிகை நாடாக இந்தியா உருவெடுக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
09-பிப்-202022:16:53 IST Report Abuse
Vijay D Ratnam கடல் மேல் மிதக்கும் காற்றாலையெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. ஏன் நாம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை குளச்சல் வரையிலான கடற்கரை பரப்பில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X