அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்த ஆண்டு நவம்பரில் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலில், வெர்ஜீனியாவில், குடியரசு கட்சி சார்பில், இந்திய வம்சாவளிப் பெண் போட்டியிட உள்ளார்.






அமெரிக்காவில், இந்த ஆண்டு நவம்பர், 3ம் தேதி, பார்லி., தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், பார்லி., தேர்தலில், வெர்ஜீனியாவிலிருந்து, குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க வாழ் இந்தியரான மங்கா அனந்தத்முலா போட்டியிட உள்ளார்.ஆந்திர பிரதேசத்தில் பிறந்த இவர், சென்னையில் பள்ளிக் கல்வியும், உ.பி, மாநிலம், ஆக்ராவில் பட்டப்படிப்பும் முடித்த பின், அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்க அரசின், ராணுவ தளவாடங்கள் கொள்முதல் திட்டத்தில், அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றினார்.





இந்நிலையில், வெர்ஜீனியாவில் போட்டியிடுவது பற்றி மங்கா கூறியதாவது:அமெரிக்க பார்லி.,யில், என் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்காக, ஹிந்துகளின் நலன்களுக்காக குரல் கொடுப்பேன். வெர்ஜீனியா, எப்போதும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளது.

ஆனால், அதிபர் டிரம்பின் சிறப்பான செயல்பாட்டால், ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் பலரும், குடியரசு கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்க உள்ளனர். அதனால், இங்கு கடந்த, ஆறு முறை வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சியின்,கேரி கொனோலியை தோற்கடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
09-பிப்-202014:28:48 IST Report Abuse
Watcha Mohideen ஆல் உயர கட் அவுட் வச்சாய்ங்களா
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
09-பிப்-202011:29:14 IST Report Abuse
Rpalnivelu //இந்தியாவை அழிச்சாச்சு அடுத்து அமெரிக்காவை அழிக்க ஒரு ஊழல் கூட்டம் குடியேறி உள்ளது// திருட்டு வந்தேறி குடும்பம் அமெரிக்காவிற்கு பார்ஸலாகி விட்டதா சொல்லவே இல்ல.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
09-பிப்-202013:02:25 IST Report Abuse
Nallavan NallavanSee, how corrupted his mind...
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
09-பிப்-202018:57:15 IST Report Abuse
jaganநீங்க லெமுரியா கண்டம் தண்ணீரில் முழ்கியபோது ஓடி வந்த வந்தேறி தானே, நீங்க யார் மற்றவரை சொல்ல? ஒரே தமாஷ் தான் .....
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
09-பிப்-202007:56:02 IST Report Abuse
Rpalnivelu தெலுங்கு தாய் மொழி பேசும் மக்களின் அதிகாரம் அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கிறது மலையாளிகளின் புகழ் அரபு நாடுகளில் வானளாவ சென்று கொண்டிருக்கிறது டுமீலன்களால் தமிழ் மக்களின் அதிகாரம் கீழ் நோக்கி செல்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X