சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement
 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

திருத்தணி:போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, இருளர்கள் தங்களது குடும்பத்துடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடத்தினர்.
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சியில், பகத்சிங் நகர், இருளர் காலனியில், 65க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.இவர்கள், குடிநீர், மின்சாரம், சாலை, தொகுப்பு வீடுகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு பலமுறை கொடுத்து போராட்டம் நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால், ஆத்திரமடைந்த, 100க்கும் மேற்பட்ட இருளர்கள் குடும்பத்துடன் நேற்று, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து, சமையல் சமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதை தொடர்ந்து, திருத்தணி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், திருத்தணி தாசில்தார் சுகந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, இருளர் மக்களிடம் சமரசம் பேசி, உடனடியாக குடிநீர் வசதி, மின்வசதி செய்து தருவதாக உறுதி கூறியதும், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X