சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து இறந்த மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

பழவேற்காடு;மின்சாரம் பாய்ந்து இறந்த மீனவர் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்கவும், மின்மாற்றியை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி, மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழவேற்காடு, அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 30. இவர், நேற்று முன்தினம், படகு இன்ஜினுடன் பொருத்தப்படும், இரும்பு தடியை, பைக்கில் வைத்து எடுத்து சென்றார்.பழவேற்காடு பஜார் பகுதி அருகே செல்லும்போது, சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் இரும்பு தடி சிக்கியதால், மின்சாரம் பாய்ந்து ஆறுமுகம் இறந்தார்.இச்சம்பவம் தொடர்பாக, நேற்று, பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறாக பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும். மின்சாரம் பாய்ந்து இறந்த ஆறுமுகம் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.திருப்பாலைவனம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X