சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரம் கடத்திய கடத்திய இருவர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement

நகரி:திருப்பதி, சேஷாசைலம் காட்டுப் பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்தலில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி, சேஷாசைலம் காட்டுப் பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக, அதிரடிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.போலீசார், அலிபிரிசெல்வபள்ளி வழியாக, காட்டுப் பகுதிக்குள் சென்று கண்காணித்தனர். அங்கு, செம்மரங்களை வெட்டி சுமோ மற்றும் இன்னோவா கார்களில் ஏற்றிக் கொண்டிருந்த கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர்.போலீசாரை கண்டு தப்பியவர்களை விரட்டினர். அந்த கும்பல், போலீசார் மீது கற்களை வீசியது. தப்பியோடியவர்களில் இருவரை, போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.பிடிபட்டவர்களை விசாரணை மேற்கொண்டதில், அவர்கள், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 30, குப்புசாமி, 35, என்பது தெரிந்தது.அதைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு கொண்டு வரப்பட்ட, இரண்டு வாகனங்களும், அதில் இருந்த, 75 செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X