கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றத்தில் 1,354 வழக்குகளில், ரூ.13.97 கோடி ரூபாய்க்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 மக்கள் நீதிமன்றத்தில் 1,354 வழக்குகளில், ரூ.13.97 கோடி ரூபாய்க்கு தீர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், காணப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றம், நேற்று நடந்தது.இதில், திருவள்ளூர், அம்பத்துார், பூந்தமல்லி உள்ளிட்ட நீதிமன்றங்களில், இதுவரை நிலுவையில் உள்ள, மோட்டார் வாகன விபத்து, குடும்ப நலம், வங்கி காசோலை உள்ளிட்ட வழக்குகள், எடுத்துக் கொள்ளப்பட்டன.திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியை, மாவட்ட தலைமை நீதிபதி செல்வநாதன் துவக்கி வைத்தார்.முதலாவது கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரணிதரன், குடும்ப நல நீதிபதி மெவிஸ் தீபிகா சுந்தரவதனா முன்னிலை வகித்தனர்.தலைமை குற்றவியல்நீதிபதி ஸ்ரீஜா, சார்பு நீதிபதி உமா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு செயலர் சரஸ்வதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்குகளை ஆய்வு செய்தனர்.இதில், மாவட்டத்தில், 5,696 வழக்குகளில், 1,354 வழக்குகள் முடிக்கப்பட்டு, 13.97 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன. மேலும், ஐந்து குடும்ப நல வழக்குகளும், தீர்வு காணப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X