பொது செய்தி

தமிழ்நாடு

தெருவுக்கு தெரு அன்னதானம்

Added : பிப் 09, 2020
Advertisement

ஆர்.கே.பேட்டை:வள்ளலார் மடங்களை தாண்டி, தெருவுக்கு தெரு நேற்று பல்வேறு பகுதிகளில் அன்னதானம், வழங்கப்பட்டது.
பொதட்டூர்பேட்டை வள்ளலார் மடம், அம்மையார்குப்பம் வாரியார் மடம், அத்திமாஞ்சேரிபேட்டை வள்ளலார் மடம் உள்ளிட்டவற்றில் நேற்று, சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய கருத்திற்கு ஏற்ப, அவரது பக்தர்கள் பசித்தோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.பொதட்டூர்பேட்டை, கருப்பு மலையை ஒட்டி அமைந்துள்ள வள்ளலார் மடத்தில், நேற்று சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில், முருகர் கோவில், சிவாலயங்களில் நேற்று பாலாபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X