தமிழ்நாடு

திண்டுக்கல்லில் எலுமிச்சை விலை உயர்வு

Added : பிப் 09, 2020
Share
Advertisement
திண்டுக்கல்திண்டுக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.800க்கு விற்ற ஒரு சிப்பம் (50கிலோ) ரூ.1400 ஆக அதிகரித்துள்ளது.திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு, சாணார்பட்டி, பழநி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார் சத்திரம் பகுதிகளில் எலுமிச்சை பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.அவற்றை அந்தந்த மார்க்கெட், உழவர்சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள்


திண்டுக்கல்திண்டுக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.800க்கு விற்ற ஒரு சிப்பம் (50கிலோ) ரூ.1400 ஆக அதிகரித்துள்ளது.திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு, சாணார்பட்டி, பழநி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார் சத்திரம் பகுதிகளில் எலுமிச்சை பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.அவற்றை அந்தந்த மார்க்கெட், உழவர்சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள் விற்கின்றனர். கடந்த மாதம் வரத்து அதிகரிப்பால் எலுமிச்சம் பழம் ஒரு சிப்பம் (50 கிலோ) ரூ.600 முதல் ரூ.800 வரை விற்றது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், மலைப்பகுதியில் எலுமிச்சை வரத்து குறைந்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளது. உழவர்சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30க்கு விற்ற எலுமிச்சை தற்போது ரூ.40 க்கு விற்கிறது.திண்டுக்கல் வியாபாரி காளியம்மாள் கூறியதாவது: மலைப்பகுதியில் பனிப்பொழிவால் எலுமிச்சை பழம் வரத்து குறைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஒரு சிப்பம் ரூ.900முதல் ரூ.1,400 வரை விற்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதத்தில் சிப்பம் ரூ.3 ஆயிரம் வரை விலை உயர வாய்ப்புள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X