தபால்துறை சேவைகள் முடக்கம்| Dinamalar

தபால்துறை சேவைகள் முடக்கம்

Added : பிப் 09, 2020
Share
செம்பட்டி குமுளி ரோடு மேம்பாட்டு பணியால், செம்பட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, தபால்துறை சேவையும் முடங்கியுள்ளது.தகவல் போக்குவரத்து மட்டுமின்றி நிதி சார்ந்த சேவைகளுக்கும், தபால்துறை பயன்பாடு அதிகரித்து வருகிறது. வங்கிகளில் கூட்டம், காத்திருப்பு பிரச்னைகள் எதிரொலியாக, சேமிப்பு, நிரந்தர வைப்பு போன்ற பரிவர்த்தனைகளுக்காக பலர் தபால்

செம்பட்டி குமுளி ரோடு மேம்பாட்டு பணியால், செம்பட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, தபால்துறை சேவையும் முடங்கியுள்ளது.தகவல் போக்குவரத்து மட்டுமின்றி நிதி சார்ந்த சேவைகளுக்கும், தபால்துறை பயன்பாடு அதிகரித்து வருகிறது. வங்கிகளில் கூட்டம், காத்திருப்பு பிரச்னைகள் எதிரொலியாக, சேமிப்பு, நிரந்தர வைப்பு போன்ற பரிவர்த்தனைகளுக்காக பலர் தபால் அலுவலகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.செம்பட்டி, ஆத்துார், சித்தையன்கோட்டை பகுதிகளில் இரு நாட்களாக பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளன. சேவைக்காக வரும் வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.தபால்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''நிதி சார்ந்த பெருமளவு பரிவர்த்தனைகள், கோர் பேங்கிங் முறையில் செயல்படுத்தப்படுகின்றன. திண்டுக்கல் - குமுளி ரோடு மேம்படுத்தலின்போது, பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 'நெட்' இணைப்பு கிடைக்காததால், சர்வர் இயக்க முடியவில்லை. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள் ளோம். அவசரகால பரிவர்த்தனைக்காக வரும் வாடிக்கையாளர்களை, கன்னிவாடி, சின்னாளபட்டி, திண்டுக்கல்லில் மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X