பொது செய்தி

தமிழ்நாடு

வில்வனேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா நடக்குமா?

Added : பிப் 09, 2020
Share
Advertisement

வேப்பூர்:வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான வில்வனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடக்காததால், மாசி மக திருவிழா நடக்குமா என பக்தர்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
வேப்பூர் அடுத்த நல்லூரில் கோமுகி, மயூரா, மணிமுக்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வில்வனேஸ்வரர், சோமலிங்கேஸ்வரர், பெரியநாயகி, இளையநாயகி, பெருமாள், காளியம்மன், விநாயகர் சுவாமிகள் உள்ளன. சோழர் கால கட்டடக்கலையை கோவில் கொண்டுள்ளது.கடந்த 2006ல் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஆண்டு தோறும் மாசி மக தேர் திருவிழா நடைபெறும்.இந்நிலையில், கோவிலை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யாததால், கோபுரம், கலசங்கள், சுற்றுச் சுவர்கள், தரை தளம் சேதமடைந்துள்ளது.
கோவிலின் முன்புற கொடிமரம், நந்தி சிலையொட்டிய பகுதிகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. கடந்தாண்டு மாசி மக திருவிழாவின் போது, இனி கோவில் கும்பாபிஷேகம் நடந்த பின், திருவிழா கொண்டாடுவது என கிராம மக்கள் முடிவு செய்தனர்.கடந்த ஓராண்டாக கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நடப்பாண்டில் வில்வனேஸ்வரர் கோவில் மாசி மக தேர் திருவிழா நடக்குமா என பக்தர்களிடம் சந்தேகத்தை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X