சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி அரசு ஊழியர் பலி

Added : பிப் 09, 2020
Share
Advertisement

சிறுபாக்கம்:அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அரசு ஊழியர் இறந்தார்.கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த மலையனூரை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன், 38. மங்களூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், மனைவி மற்றும் 3 வயது மகனை ஆத்துாரில் உள்ள மாமனார் வீட்டில் தங்க வைத்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தார்.இரவு 9:40 மணியளவில் சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்கும்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர், செந்தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X