பொது செய்தி

தமிழ்நாடு

சி.என்.பாளையம், பண்ருட்டியில் மகா கும்பாபிேஷகம்

Added : பிப் 09, 2020
Advertisement
 சி.என்.பாளையம், பண்ருட்டியில் மகா கும்பாபிேஷகம்

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் செங்கழுநீர் விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
கடந்த 4 ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. 5ம் தேதி புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கோ பூஜை, நவக்கிரஹ பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ரக் ஷாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.6ம் தேதி வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை நடந்து, 9:00 மணிக்கு யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக எடுத்து வரப்பட்டது. காலை 9:30 மணிக்கு செங்கழுநீர் விநாயகர் கோவிலுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.9:40 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.மதியம் 2:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.பண்ருட்டிபண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், தாயார் சன்னதி ஆண்டாள் சுதர்சன ஹயக்கிரீவர் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 5ம் தேதி புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு முதல்கால பூஜையும், 6ம் தேதி காலை 7:30 மணிக்கு 2ம் கால பூஜையும் மாலை 3ம் கால பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு 4ம் கால பூஜையும் பூர்ணாஹீதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடு நடந்து, காலை 9:00 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X