பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

Added : பிப் 09, 2020
Advertisement
 புதிய பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

விருத்தாசலம்:சின்னகண்டியங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 16 லட்சம் ரூபாயில் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.
விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, ஒன்றிய பொது நிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.இதன் திறப்பு விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் செல்லதுரை, பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமாரி, சுந்தரம், ஊராட்சி தலைவர் விமலா, வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். தலைமை ஆசிரியர் பத்மாவதி, ஊராட்சி துணைத் தலைவர் பரமகுரு, செயலர் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., நிர்வாகிகள் வீரபாண்டியன், ரவி, சத்யா செல்வம், அருளாகரன், குணா ராமு, பா.ம.க., குப்புசாமி, ஜெயகுரு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X