பொது செய்தி

தமிழ்நாடு

'டாப்செட்கோ' கடன் இலக்கு ரூ.150 கோடி

Added : பிப் 09, 2020
Share
Advertisement

மதுரை, :''தமிழகத்தில் 'டாப்செட்கோ' (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்) திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.150 கோடி மானிய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் தெரிவித்தார்.மதுரையில் இத்துறைக்கு உட்பட்ட அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுதிகளில் உணவின் தரம், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். சாத்தமங்கலத்தில் கூடுதல் கட்டடம் கட்ட உத்தரவிட்டார். திருநகரில் விடுதியை கல்லுாரி மாணவருக்கான விடுதியாக மாற்ற அறிவுறுத்தினார்.அவர் கூறியதாவது:அரசு விடுதிகளில் இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இத்துறைக்கு உட்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோருக்கான மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் நடப்பாண்டில் மானிய கடன் வழங்கும் இலக்கு ரூ.150 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் உள்ளோர் கடன் பெறலாம். சுயஉதவி குழுக்கள் மற்றும் தனிநபர் கடன்களும் வழங்கப்படுகிறது. கூட்டுறவு இணைப் பதிவாளர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், நகர் மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.2020-21ம் ஆண்டு முதல் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X