பொது செய்தி

தமிழ்நாடு

பதக்கம் பெற்ற குங்பூ மாணவர்கள்

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 பதக்கம் பெற்ற குங்பூ மாணவர்கள்

கடலுார்:கோவையில் நடந்த நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பதக்கம் பெற்ற, கடலுார் மன்சூரியா குங்பூ பயிற்சி பள்ளி மாணவர்கள் எஸ்.பி.,யிடம் வாழ்த்து பெற்றனர்.கோவையில் நேரு யுவ கேந்திரா சார்பில், நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிகழ்ச்சியில், குங்பூ, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் கடலுார் மன்சூரியா குங்பூ, பயிற்சி பள்ளி சார்பில் பங்கேற்ற, 47 மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் கடலுார் எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிறப்பு பயிற்சியாளர் அன்பு, பயிற்சியாளர்கள் ஞானரசு, தாஸ், புஷ்பராஜ், கார்த்திக் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X