சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : பிப் 09, 2020
Advertisement

கொத்தனார் கைது
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி தனியார் பள்ளி12ம் வகுப்பு மாணவிக்கு வன்னிவேலம்பட்டி கந்தவேல் மகன் கொத்தனார் முத்துமுனியாண்டி 25, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி

திருமங்கலம்: சங்கரன்கோவில் அருகே தேவர்குளம் லாரி டிரைவர் ஜெகதீஷ் 45. துாத்துக்குடியில் இருந்து பழநிக்கு பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் நேற்று அதிகாலை மதுரை எலியார்பத்தி டோல்கேட் அருகே ரோட்டோரம் நிறுத்தினார். 20 வயதுள்ள 3 பேர் அவரை தாக்கி ரூ.10 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பினர். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் நகைக்கொள்ளை

சோழவந்தான்: திருவாலவாயநல்லுார் நித்தியானந்தம் 39. தென்னை நார் தொழிற்சாலை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஒரு மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்த மூவர் நுழைந்து ஆயுதங்களை காட்டி 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X