அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக தீர்ப்பு அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement
 எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக தீர்ப்பு  அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

காட்டுமன்னார்கோவில்:முருகுமாறன் எம்.எல்.ஏ., வெற்றி செல்லும் என, சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை, காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க, வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி,. கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. அதில், முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கட்டுமன்னார்கோவிலில், நகர செயலாளர் எம்.ஜி.ஆர்., தாசன் தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X