மகா கும்பாபிஷேகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகா கும்பாபிஷேகம்

Added : பிப் 09, 2020
Share
 மகா கும்பாபிஷேகம்

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், தாயார் சன்னதி ஆண்டாள் சுதர்சன ஹயக்கிரீவர் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 5 ம் தேதி புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு முதல்கால பூஜையும், 6ம் தேதி காலை 7:30 மணிக்கு 2ம் கால பூஜையும் மாலை 3 ம் கால பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு 4ம் கால பூஜையும் பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடு நடந்து, காலை 9:00 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X