தைப்பூச ஜோதி தரிசன விழா பக்தர்களுக்கு மோர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச ஜோதி தரிசன விழா பக்தர்களுக்கு மோர் வழங்கல்

Added : பிப் 09, 2020
Share
 தைப்பூச ஜோதி தரிசன விழா பக்தர்களுக்கு மோர் வழங்கல்

மந்தாரக்குப்பம்:வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில், டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில், நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதையொட்டி வடலுார் சபையில் உள்ள டி.ஆர்.,சாந்தி பர்னிச்சர் நிர்வாகம் சார்பில், நீர் மோர், பழச்சாறு வகைகளை அரிமா சங்க தலைவர் ராஜ மாரியப்பன், பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், டி.ஆர்.எம்., சாந்தி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சாந்தி ராஜமாரியப்பன், நெய்வேலி நாடார் சங்க தலைவர் திருமால் கொழுந்து, கார்த்திக், ஊழியர்கள் கணேசன், ஜீவானந்தம், மகாலிங்கம், தணிகாசலம், மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X