பொது செய்தி

தமிழ்நாடு

முனியனார் கோவிலில் லட்ச தீப விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 முனியனார் கோவிலில் லட்ச தீப விழா

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே, முனியனார் கோவிலில் நடந்த லட்ச தீப விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவில் வளாக பகுதியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில் உள்ள முனியனார் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்ச தீப விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு 74 வது லட்ச தீப விழா, கடந்த 5ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், தொடங்கியது.நேற்று முன்தினம் முனியனார், நல்ல நாயகி, நாயகி அய்யனார், பொன்னி அம்மன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5;30 மணிக்கு அலங்கார காவடி வீதியுலா வந்து, லட்ச தீப விழா நடந்தது.விழாவில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X