பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணியாற்றுங்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அறிவுரை

Added : பிப் 09, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முதல் கூட்டத்தில் பங்கேற்ற பெரியகருப்பன் எம்.எல்.ஏ., பேசுகையில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்' என்று உள்ளாட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.

கூட்டத்திற்கு தலைவர் சண்முகவடிவேலு தலைமை வகித்தார். பி.டி.ஓ.க்கள் ஜெயராமன், சுமதி முன்னிலை வகித்தனர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., பேசுகையில், ஒன்றியத்திலுள்ள 40 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் மக்களின் தேவை அறிந்து அலுவலர்கள், தலைவரிடம் தெரிவித்து முறையான அனுமதி பெற்று நிறைவேற்ற வேண்டும்.

அலுவலர்களை பொறுத்தவரையில் திட்டங்கள் தீட்டி, மதிப்பீடு தயாரித்து, நிதி ஆதாரம் தேடவும், பல்வேறு அனுமதி பெறவும் சற்று தாமதம் ஆகும். எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியாது, மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்படி செயல்படவேண்டும்,.என்றார்.

தலைவர் பேசுகையில், ஒன்றிய கவுன்சிலர்கள் மக்கள் தேவைகளை அறிந்து அவற்றை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். குறிப்பாக கோடையில் வர உள்ள குடிநீர் பிரச்னைகளுக்கு திட்டப்பணிகளில் முக்கியத்துவம் தரப்படும்' என்றார்.பி.டி.ஓ., ஜெயராமன் பேசுகையில், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தொழில்நுட்பக்குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்' என்றார்.

துணைத் தலைவர் மீனாள், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா,கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், ஜெயபாரதி,சுமதி, கலைமகள், சகாதேவன், ராமேஸ்வரி, உதவிப் பொறியாளர்கள் மஞ்சுளா, காஞ்சனா, சுப்பிரமணியன் ஏ.பி.டி.ஓ.,க்கள் செழியன்,சந்திரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X