கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விருதையில் மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 2கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 573 ரூபாய்க்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement
 விருதையில் மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 2கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 573 ரூபாய்க்கு தீர்வு

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 573 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோகரன், முன்னாள் மாவட்ட நீதிபதி மோகன்தாஸ், வழக்கறிஞர்கள் ராஜா, ரவிச்சந்திரன், ஜெயசங்கர், நெடுமாறன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.வங்கி வாரா கடன், விபத்து இழப்பீடு, குடும்ப நலன், செக் மோசடி உட்பட 195 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, 2 கோடியே 4 ஆயிரத்து 573 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை, வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக உவியாளர் அஸ்வதராமன் செய்திருந்தார்.
கிள்ளை சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 281 வழக்குகளில், 69 லட்சத்து 13 ஆயிரத்து 506 ரூபாய் தீர்வு காணப்பட்டது.சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிபதி கருணாநிதி தலைமையில், நேற்று, நடந்தது. 11 சிவில் வழக்கு, 14 விபத்து இழப்பீடு வழக்கு, 28 வங்கிகள் வராக்கடன் வழக்கு, 228குற்ற வழக்குகள் என மொத்தம் 281 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், 69 லட்சத்து 13 ஆயிரத்து 506 ரூபாய் தீர்வு காணப்பட்டது. சார்பு நீதிபதி நீஷ், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி கீதா, பயிற்சி நீதிபதிகள் கீர்த்தனா, சந்தானம், முகமது சாதிக் உசைன், முதுநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்தஜோதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X