பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர்களுக்கு மேலாண்மை பயிற்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

Added : பிப் 09, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றியதலைவர் லதா தலைமையில் நடைபெற்றது.பி.டி.ஓ.,க்கள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள் முன்னிலை வகித்தனர்.மேலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து உள்ளிட்டஅதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:முத்துச்சாமி, துணைத்தலைவர்: தெருவிளக்கு மற்றும் குடிதண்ணீர், சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பி.டி.ஓ., சுந்தரமகாலிங்கம்:விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,

அண்ணாத்துரை 5வது வார்டு கவுன்சிலர்:ஒன்றியகுழு கூட்டத்திற்கு அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.மத்திய அரசின் நலத்திட்டங்களின் பெயரை அரசு அலுவலகங்களில் தமிழாக்கம் செய்து வெளியிட தீர்மானம்நிறைவேற்ற வேண்டும்.

பி.டி.ஓ., சுந்தரமகாலிங்கம்: அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் அனைவரும் பங்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ருக்மணி, கவுன்சிலர்:ராஜகம்பீரம் பகுதியில் கொசு மருந்து அடிப்பதுகிடையாது,மேலும் சாக்கடைகள், குப்பை ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

பி.டி.ஓ., சுந்தரமகாலிங்கம்:சுகாதார பணியாளர்களை கொண்டு விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும்.

பஞ்சவர்ணம், கவுன்சிலர்:வேம்பத்துார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படுவது கிடையாது, இந்திராநகர், லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவது கிடையாது.

பி.டி.ஓ.,(ஊ) அழகுமீனாள்:தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மலைச்சாமி, கவுன்சிலர்:சூரக்குளம் கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர், தெருவிளக்கு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பி.டி.ஓ.:விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல ஊராட்சி தலைவர்கள் செக் பவர் இல்லாததால் தங்களது சொந்த பணத்தில் பொது வேலைகளை செய்து வருகின்றனர் என்றனர். அதற்கு பதிலளித்து மேலாளர் ரமேஷ் பேசும் போது, உள்ளாட்சி நிதி நிர்வாகத்தில் ஊராட்சி தலைவர்கள் எப்படி பணியாற்றுவது என்பது பற்றி விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X