பொது செய்தி

தமிழ்நாடு

விருதையில் தை பூச விழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Added : பிப் 09, 2020
Advertisement
 விருதையில் தை பூச விழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

விருத்தாசலம்:தை பூசத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து ஊர்வமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், நேற்று காலை, சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமிக்கு, சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு மேல், பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. ரயில்வே ஜங்ஷன் மாரியம்மன் கோவிலுக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். முதனை செம்பையனார் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக சென்றனர். மாலை 4:00 மணிக்கு மேல், வேல் முழுகுதல் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X