பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவாளர்களுக்கு பதவி உயர்வு 'கட்': தேசிய ஆணைய உறுப்பினர் அதிர்ச்சி

Added : பிப் 09, 2020
Advertisement
 துப்புரவாளர்களுக்கு பதவி உயர்வு 'கட்': தேசிய ஆணைய உறுப்பினர் அதிர்ச்சி

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் சில உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்ற தகவலை கேட்டு தேசிய துப்புரவாளர்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி அதிர்ச்சியடைந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்களின் பிரச்னைகள் மற்றும் வாழ்வாதார தேவைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் நடந்தது. தேசிய துப்புரவாளர்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.ஜெகதீஷ் கிர்மானி கேள்விகளுக்கு பல அலுவலர்கள் மழுப்பலான பதிலேயே தெரிவித்ததுடன், துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதாக புள்ளிவிவரங்களை அடுக்கினர். ஆனால் துப்புரவு பணியாளர் சார்பில் பங்கேற்றவர்கள் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

துப்புரவு பணியாளர் சங்க தலைவர் மலைச்சாமி பேசும் போது:அதிகாரிகள் கூறுவது அனைத்தும் பொய், கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்பவர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை, இன்று தான் கொடுத்துள்ளார்கள், என்றார்.துப்புரவு பணியாளர்களின் பதவி உயர்வு குறித்து கேட்டதற்கு அப்படி ஒன்று இல்லை என்று அலுவலர்கள் சிலர் கூற ஜெகதீஷ் கிர்மானி அதிர்ச்சி அடைந்தார். தகுதியானவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க பரிந்துரைத்தார்.

முன்னதாக ஆணையர் வருகையையொட்டி சிவகங்கை நகராட்சி அலுவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து கதவை மூடி வைத்திருந்தனர்.அரசு மருத்துவமனையிலும் கழிப்பறை தொட்டி பராமரிப்பு இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டி முறையாக பராமரிக்க உத்தரவிட்டார்.ஜெகதீஷ் கிர்மானி தெரிவித்ததாவது: ஒவ்வொரு ஒப்பந்த துப்புரவு பணியாளருக்கும் மாத ஊதியத்தை 7750 ல் இருந்து 14500 ஆக உயர்த்தி வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டங்களில் துப்புரவு பணியாளர்களையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்கவேண்டும், என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X