பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்நுட்ப பயிற்சி

Added : பிப் 09, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

வேளாண்மை துணை இயக்குநர் சசிகலா முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் தொழில்நுட்ப செய்திகள், சாகுபடி தொழில்நுட்பம், பூச்சி மருந்து பயன்பாடு, நோய் தாக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, அதை மற்ற விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இப்பயிற்சியில் குன்றக்குடி வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் செந்துார்குமரன், செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பரமசிவம், வேளாண்மை உதவி இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், வேளாண்மை அலுவலர்கள் பரமேஸ்வரன், கருணாநிதி, கால்நடை உதவி இயக்குநர் ராமச்சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X