அறிகுறி தென்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிகுறி தென்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Added : பிப் 09, 2020
Share

ராமநாதபுரம்:கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் மட்டுமே அதற்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். தேவையின்றி பரிசோதித்துசம்பந்தப்பட்டவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கக் கூடாது, என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து ராமநாதபுரம் பகுதிக்கு ஒரு மாதத்தில் மட்டும் 84 பேர் சீனாவிலிருந்து திரும்பியுள்ளனர். திருவாடானை அருகே வெள்ளையாபுரம், மங்களகுடியைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதில் 11 பேர் மட்டுமே மருத்துவப் படிப்புக்காக சீனா சென்றவர்களாகவும், மீதிப்பேர் கேட்டரிங் பணிக்காக சென்றவர்கள்.

சீனாவிலிருந்து ராமநாதபுரம் வந்தவர்கள் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட சுகாதாரப் பிரிவினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே அப்பாதிப்புக்கான சோதனையை மேற்கொள்ளவேண்டும். தேவையின்றி கொரோனா பரிசோதனையை நடத்தி அனைவரையும் பதற்றத்துக்கு ஆளாக்கவேண்டாம், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X