தமிழ்நாடு

'லோக் அதாலத்'தில் ரூ.18 கோடி இழப்பீடு

Added : பிப் 09, 2020
Advertisement
 'லோக் அதாலத்'தில் ரூ.18 கோடி இழப்பீடு



மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் நடந்த தேசிய 'லோக்அதாலத்' தில் 2361 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 18 கோடியே 7 லட்சத்து 3 ஆயிரத்து 242 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு உட்பட 301 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, வி.பவானி சுப்பராயன், டி.கிருஷ்ணவள்ளி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், உதயன், பூபாலன், சிவசுப்பிரமணியன், மோகன்தாஸ், உறுப்பினர்கள் ஜெயா இந்திரா படேல், முகமது முகைதீன், வெங்கலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி விசாரித்தனர். 33 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. 2 கோடியே 16 லட்சத்து 22 ஆயிரத்து 377 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.மதுரை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு தலைமை வகித்தார். விசாரணைக்கு 8181 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் வி.பத்மநாபன், சுமதி, மீரா சுமதி, சிவப்பிரகாசம், சம்பத்குமார், ஸ்ரீதரன், ேஹமானந்த குமார், விஜயலட்சுமி, தங்கவேல், இன்பகார்த்திக், நாகப்பன், அனுராதா, எம்.பத்ம நாபன், சந்திரசேகர், பிரவீன்குமார், முத்துராமன், கார்த்திகேயன், பிரசாத் விசாரித்தனர். 2328 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 15 கோடியே 90 லட்சத்து 80 ஆயிரத்து 865 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா பங்கேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X