தமிழ்நாடு

ஆர்வமில்லை! நெல் மூட்டைகளை இருப்பு வைக்க:வெறிச்சோடிய தானிய கிட்டங்கி

Added : பிப் 09, 2020
Share
Advertisement
ஆர்வமில்லை! நெல் மூட்டைகளை இருப்பு வைக்க:வெறிச்சோடிய தானிய கிட்டங்கி

திருவாடானை:திருவாடானை ஒழுங்குமுறை விற்பனைகிட்டங்கியில் நெல் மூடைகளை இருப்புவைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டாததால்வெறிசோடி உள்ளது.

திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில்ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கி புதியகட்டிடம் கடந்தாண்டு திறக்கப்பட்டது.இதில் பத்தாயிரம் நெல் மூடைகள் வரைஇருப்பு வைத்து கொள்ளலாம். மூடைகளின்எண்ணிக்கைக்கு தகுந்தாறு விவசாயிகளுக்குகடன் வழங்கபடும். கடன் வாங்க விருப்பம்இல்லாத விவசாயிகள் விலை கூடும் போது நெல் மூடைகளை திருப்பி எடுத்து கொண்டு அதற்கான வாடகையைசெலுத்தி கொள்ளலாம்.

இந்த ஆண்டு அமோக விளைச்சல் அடைந்தபோதும் நெல் மூடைகளை இருப்பு வைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:3 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியில் இருந்து விவசாயிகள் மீள முடியவில்லை. வாங்கியகடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதால் அறுவடை செய்த நெல்லை உடனே விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பு வைக்கும் அளவிற்கு நெல் மூடைகள் இல்லாததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நாட விருப்பம் இல்லை, என்றனர்.இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது: பத்தாயிரம் மூடைகள் வரை இருப்பு வைத்து கொள்ளலாம். தற்போது 60 மூடைகளே உள்ளன. இனிவரும் நாட்களில் மூடைகளை இருப்பு வைக்க விவசாயிகள்ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X