பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சக்கொல்லை வைகையில் தைப்பூச தீர்த்தவாரி விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 மஞ்சக்கொல்லை வைகையில் தைப்பூச  தீர்த்தவாரி விழா

பரமக்குடி:பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் தைப்பூச விழாவையொட்டி, மஞ்சக்கொல்லை வைகையாற்றில் நடந்த தீர்த்தவாரி உற்ஸவத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு காய்கறிகளை படைத்து, அன்னதானம் வழங்கினர்.

நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. தைப்பூச விழாவை யொட்டி சுவாமி, அம்பாள் தனித்தனியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ள சிறகி கோட்டை சிவன் கோயிலை அடைந்தனர்.அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது

மஞ்சக்கொல்லை பகுதி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது ஆற்றில் அமைக்கப்பட்டு இருந்த தீர்த்தத் தொட்டியில் சுவாமி தீர்த்தவாரி கண்டார். தொடர்ந்து கிராம மக்கள் அப் பகுதியில் விளைந்த காய்கறி உள்ளிட்ட பொருட்களை சுவாமி மீது வாரி இறைத்தனர். அப் பகுதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.சிறப்பு தீபாராதனை களுக்குப் பின் மீண்டும் நயினார்கோவில் நோக்கி சுவாமி புறப்பட்டு சென்றார்.

* பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி குமர சுப்பிரமணிய சுவாமி கோயிலை அடைந்தனர். அங்கு கோயில் முன்பு தீர்த்தவாரி உற்சவத்திற்கு பின் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பின்னர் இரவு 8:00 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்து ஈஸ்வரன் கோயிலை அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X