பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில்773 வழக்குகளில் ரூ.5 கோடிக்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மக்கள் நீதிமன்ற 773 வழக்குகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில்தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வககித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ப்ரீத்தா வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனியரசு, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் நம்பு நாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சமரச தீர்வு மையத்தின் மூலம் ராமநாதபுரம், ராமேஸ்வரம், முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, திருவாடானை உள்ளிட்ட இடங்களில் 14 அமர்வுகள் நடந்தது.இதில் வாகன விபத்து இழப்பீடு, வங்கி கடன் தீர்வு, செக் மோசடி, குடும்ப பிரச்னைகள், ஜீவானாம்சம்உட்பட 2,100 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.773 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 5 கோடியே 25 ஆயிரத்து 130 ரூபாய் வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக் குழு முதுநிலை உதவியாளர் பிளோமின், இளநிலை உதவியாளர் லோகநாதன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X