யார் அந்த காங்., எம்பி?| Dinamalar

யார் அந்த காங்., எம்பி?

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (27)
Share
rahul, rahulgandhi, gujarat, MP, tamilnadu, தமிழகம், ராகுல், ராகுல்காந்தி, குஜராத்

தேர்தலில், அரசியல் கட்சிகளுக்கு பிரசார உத்திகளை சொல்லித்தருவது, சமூக வலைதளங்களில் எப்படி பிரசாரம் செய்வது என்பது போன்ற வேலைகளை செய்ய, தனியார் நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில், தி.மு.க., இப்படி ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.


latest tamil news



வரும், 2021ல், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு, இந்த நிறுவனம் தி.மு.க.,விற்கு உதவும். இதே போல, குஜராத்தில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர், காங்., முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து, தன் நிறுவனம் பற்றியும், காங்கிரசுக்கு பணியாற்ற தயாராக இருப்பது பற்றியும் சொல்ல விரும்பினார். தனியாகச் சென்று ராகுலின், 'அப்பாயிண்ட்மெண்ட்' கேட்டால் கிடைக்காது என்பதால், காங்., பிரபலங்கள் மூலமாக முயற்சி செய்தார்.
தமிழக காங்.,- எம்.பி., ஒருவர், இவருக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். உடனே, அந்நிறுவனத்தின் தலைவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 'ராகுல், 'அப்பாயின்ட்மென்ட்' வேண்டும் என்றால், தனக்கு கணிசமான தொகை தர வேண்டும்' என, அந்த எம்.பி., கேட்டாராம்.

ராகுலை சந்தித்தால் போதும் என்பதால், தமிழக எம்.பி., கேட்ட கரன்சி கட்டுகளை, அந்நிறுவனத்தின் தலைவர் தந்திருக்கிறார். சந்திப்பு எப்போது என கேட்டதற்கு, விரைவில் என, அந்த எம்.பி. பதில் சொல்லியிருக்கிறார். ஒரு வாரம், இரண்டு வாரம் என, காத்திருந்து தான் மிச்சம். எதுவுமே நடக்கவில்லை.

உடனே அந்த நபர், எம்.பி.,க்கு போன் செய்திருக்கிறார். மணி அடித்துக் கொண்டேயிருந்தது; அவர் போனை எடுக்கவேயில்லை. அடுத்த சில நாட்களும், நிறுவனத்தின் தலைவர் முயற்சித்திருக்கிறார். எந்த பலனும் இல்லை. மறுபடி போன் செய்தால், விரைவில் சந்திப்பு நடக்கும் என, அந்த எம்.பி., சாக்கு போக்கு சொல்வார் எனக்கருதி, பணம் போனால் போகட்டும் என விட்டுவிட்டாராம்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X