தீர்வு! மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 10.36 கோடிக்கு... வழக்குகள் 1,718 முடித்து வைக்கப்பட்டது| Dinamalar

தமிழ்நாடு

தீர்வு! மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 10.36 கோடிக்கு... வழக்குகள் 1,718 முடித்து வைக்கப்பட்டது

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Share
தீர்வு! மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 10.36 கோடிக்கு... வழக்குகள் 1,718 முடித்து வைக்கப்பட்டது

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 10.36 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் நீதி மன்றங்களில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.கடலுார் கோர்ட் வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு, முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமை தாங்கினார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் ஜோதி வரவேற்றார். மாவட்ட நீதிபதி அய்யப்பன் பிள்ளை, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், மாவட்ட குடும்ப நல நீதிபதி மகாலட்சுமி, தலைமை குற்றவியல் நீதிபதி திருவேங்கட சீனிவாசன், முதன்மை கூடுதல் சார்பு நீதிபதி மூர்த்தி, இரண்டாவது சார்பு நீதிபதி பிரபாவதி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சித்தார்த்தன், குற்றவியல் நீதித்துறை நடுவர் அன்வர் சதாத், பயிற்சி நீதித்துறை நடுவர்கள் சிவபழனி, ஆர்த்தி, உறுப்பினர்கள் ஆதிநாராயணி, சிவக்குமார், திவாகர் பங்கேற்றனர்
.மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்து, சிவில், குடும்ப நலம், வங்கி வாராக்கடன், சிறு குற்ற வழக்கு, தொழிலாளர் வழக்கு என மொத்தம் 13,964 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 1,718 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 10 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரத்து 137 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X