பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., கோயில்களில் துணை முதல்வர் தரிசனம்

Added : பிப் 09, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் மற்றும் குலதெய்வகோயிலான செண்பகதோப்பு வனபேச்சியம்மன் கோயில்களில் தரிசனம் செய்தார்.

நேற்று காலை 7:20 மணிக்கு ஆண்டாள் கோயிலுக்கு வந்த அவரை கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பட்டர்கள் வரவேற்றனர். ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் வடபத்ரசயனர் சன்னதியில் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்தார்.

செண்பகதோப்பு வனபேச்சியம்மன் கோயிலுக்கு காலை 9:00 மணிக்கு வந்தார். அங்கு 2 மணிநேரம் காத்திருந்த அம்மனுக்கு நடந்த சிறப்பு அபிேஷகம் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். ஸ்ரீவி.எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X