பொது செய்தி

தமிழ்நாடு

கிராம பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்:கல்லூரிஅளிக்கும் செய்முறை பயிற்சி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
 கிராம பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்:கல்லூரிஅளிக்கும் செய்முறை பயிற்சி

சிவகாசி:கல்வி நிறுவனங்கள் பொதுவாக தங்களது கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பர்.

அம்மாணவர்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருவர். உதாரணமாக விளையாட்டு சம்பந்தமான பொருட்கள், நுாலகம், ஆய்வகங்கள் என எல்லா வசதிகளையும் தங்களுடைய மாணவர்களுக்காக ஏற்படுத்தி தருவர். இந்த வசதிகள் அனைத்து கல்லுாரிகளிலுமே இருக்கும். ஒரு சில கல்லுாரிகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவர்.

உதாரணமாக பொது தேர்வை எதிர்கொள்வது எப்படி, தன்னம்பிக்கை வளர்ப்பது எப்படி போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவர். அந்த வகையில் சிவகாசி காக்கிவாடன் பட்டி கே.ஆர்.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிர்வாகத்தினர் அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வினை எதிர்கொண்டு பயன்பெறும் வகையில் கல்லுாரி ஆய்வகங்களில் அவர்களுக்கு செய்முறையாக பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

இதற்காக கல்லுாரி பேராசிரியர்கள், அரசு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் கலந்து பேசி பிளஸ் 2 மாணவர்களின் பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை அறிந்து கொள்கின்றனர். அந்த பாடம் சம்பந்தமாக கல்லுாரி ஆய்வகங்களில் உபகரணங்கள் மூலமாக பயிற்சி அளிக்கின்றனர்.

இயற்பியல், கம்ப்யூட்டர் செய்முறை பயிற்சி அளிக்கின்றனர். இதற்கான ஒவ்வொரு மாணவருக்கும் தனி தனியாக கம்ப்யூட்டர் கல்வி கற்று தரப்படுகிறது. இது தவிர தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, பொது தேர்வினை பயமின்றி எதிர்கொள்வது எப்படி என்பது போன்ற பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இக்கல்லுாரியில் காக்கி வாடன்பட்டி, தாயில்பட்டி உட்பட 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளியை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்பது தனி சிறப்பு.

வாழ்க்கையில் உயர பயிற்சி

கிராம ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லுாரியில் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளோம். அறிவியல் ஆய்வகத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களை கொண்டு, பேராசிரியர்களால் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் வசதிக்காக கல்லுாரி பஸ்சிலே அழைத்து வருகிறோம். அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும், வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.-

- பொன்ராஜ், கல்லுாரி செயலர்.

எளிய முறையில் செய்முறை

மாணவர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்து கொள்ளும் வகையில் கல்லுாரி ஆய்வகத்தில் பயற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனி கம்ப்யூட்டர் ஒதுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கற்று கொள்கின்றனர். கடினமான பாடங்களில் உள்ள செய்முறை தேர்வுகள் எளிய முறையில் விளக்கப்படுகிறது.

அழைத்து வரப்படும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டு சிறப்பாக கவனிக்க ப்படுகிறது.- கண்ணன், கல்லுாரி தலைவர்.மாணவர்களை மேம்படுத்த உதவிபொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிலர் பயத்துடன் இருப்பர். அவர்களின் பயத்தினை போக்கி தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. ஊக்கத்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற வாய்ப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு குறைவு என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் அரசு பள்ளிகளில் கிராம பகுதி மாணவர்கள் தான் அதிகளவில் படிக்கின்றனர். அவர்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி நடத்தப் படுகிறது.

- தவபாலன், கல்லுாரி பேராசிரியர்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ள வசதி

கல்லுாரி ஆய்வகத்தில் பெற்ற பயிற்சியால் செய்முறை தேர்வு எளிதாக எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உபகரணங்கள் கொடுக்கப்பட்டு விளக்கப்பட்டதால் நன்றாக புரிந்தது. சந்தேகங்களுக்கு பொறுமையாக தெளிவாக விளக்கினர். பொது தேர்வினை எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்.

- தனலட்சுமி, பிளஸ் 2 மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளி, தாயில்பட்டி.

எதையும் சாதிக்கும் தைரியம்

பொது தேர்வினை எப்படி எதிர்கொள்வது என்ற பயம் இருந்தது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட பயிற்சியால் பயம் போய்விட்டது. தன்னம்பிக்கை பயிற்சியால் எதையும் சாதிக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் இது போன்ற பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

- மனோஜ், பிளஸ் 2 மாணவர்,

அரசு மேல்நிலைப் பள்ளி, தாயில்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X