பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோயில்களில் தைப்பூசம் கோலாகலம்

Added : பிப் 09, 2020
Advertisement

தேனி தைப்பூசத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தேனி- பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வந்தனர். மூலவர் சண்முகர் மயில் வாகனத்திலும், உற்சவர் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தனர். அறம்வளர்த்த நாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பலர் வராகநதியில் நீராடி பால்குடம் எடுத்து வந்து பாலசுப்பிரமணியரை வழிபட்டனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கார்த்திக், தினேஷ், பக்தர்கள் செய்தனர்.பெரியகுளம் ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், சிவசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடனும், பாலமுத்துகுமார தண்டபாணி ,ராஜஅலங்காரத்திலும் காட்சியளித்தனர். பாலாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்திருந்தார்.வடுகபட்டியில் சத்தியஞானசபை வள்ளலார் கோயிலில், தைப்பூச ஜோதிதரிசனம் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை மற்றும் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.போடி: போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், தீபாராதனை நடந்தது.வள்ளி, தெய்வானையுடன் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு அலங்காரத்தினை அர்ச்சகர் விக்னேஸ்வரன் செய்திருந்தார்.ஏராளமானோர் தரிசித்தனர்.போடி -- தேனி மெயின் ரோட்டில் உள்ள தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலிகை கலந்த தீர்த்த சுனைகளில் ஏராளமானோர் நீராடி முருகனின் அருளாசி பெற்றனர்.அருகே உள்ள சித்திரபுத்திரனார் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.போடி பரமசிவன் கோயிலில் முருகன், வள்ளி தெய்வானைக்கு தீபாராதனை நடந்தது.கம்பம்: கம்பம் வேலப்பர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. முருகனுக்கு அபிேஷக, ஆராதனைகள், பக்தர்கள் வழங்கிய நுாற்றுக்கணக்கான லிட்டர் பால் கொண்டு பாலாபிேஷகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார்.கம்பராயப்பெருமாள் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், நடைபெற்றது.உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாதீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முருகன் சன்னதியில் பாலாபிேஷகம், தீபாராதனை நடந்தது. முருகன் சர்வஅலங்காரத்தில் எழுந்தருளினார்.ராயப்பன்பட்டி சண்முகாநதி அணைக்கு அருகில் உள்ள சண்முகநாதன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். பிரசித்திபெற்றதும், புராதானமுமான இக்கோயிலில் முருகனுக்கு காலை6:30 மணியிலிருந்து 9:00 மணி வரை பாலாபிேஷகம் நடைபெற்றது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இங்கு நடைபெற்ற சிறப்பு அபிேஷக ,ஆராதனைகளில் டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.முருகேசன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.ரகுபதி, கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானத்தில் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். மாலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.கூடலுார் : கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுருளிமலை -பழநிமலை பாதயாத்திரை பெண்கள் குழுவினர் பஜனைப்பாடல்கள் பாடினர்.குமுளி மலைப்பாதையின் துவக்கப்பகுதியான லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடந்தன. கூடலுார், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். மூணாறு: மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உட்பட ஐதீகங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தைப்பூசத்திருவிழா, அனைத்து பழநி பாத யாத்திரை குழு சார்பில் நடந்தது. பகல் 12:30 மணிக்கு கோயிலில் இருந்துகரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் புடை சூழ பெண்கள் வடம் பிடித்து இழுக்கசப்பர ஊர்வலம் புறப்பட்டது. சப்பரத்தில்உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளினார்.பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலில் சப்பரம் சென்றடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சப்பரம் நகரில் வலம் வந்த பிறகு மாலை 5:30 மணிக்கு கோயிலை சென்றடைந்தது.அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X