தமிழ்நாடு

தவியாய் தவிக்கும் பக்தர்கள் கோயில்களில் இல்லை அடிப்படை வசதிகள்: அலட்சிய போக்கில் இந்துஅறநிலையத்துறை

Added : பிப் 09, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கும் நிலையில் போதிய அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண உள்ளாட்சி அமைப்பு, அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. பல நுாற்றாறண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பராம்பரியமிக்க சைவ, வைணவ கோயில்களுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வாரவிடுமுறை நாட்களில் வருவது அதிகரித்து வருகிறது. ஆனால் வரும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம், குளியலறை, வாகன பார்க்கிங், காலனி பாதுகாப்புமிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகள் போதியளவிற்கு கிடைக்காமல்பரிதவிக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு பிறமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். போதிய பார்க்கிங் வசதியின்றி வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்த படுகிறது. அதற்கும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கபடுகிறது. அதிகரிக்கும் பக்தர்களுக்கு ஏற்ப குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை.

பல லட்சம் பக்தர்கள் வரும் சபரிமலையில் கூட பக்தர்களுக்கு பல அடிப்படை வசதிகள் உள்ளது. ஆனால் சில ஆயிரம் பக்தர்கள் வரும் மாவட்டத்திலுள்ள கோயில்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அறநிலையத்துறை அலட்சியம் காட்டுகிறது.

அதேநேரம் அறநிலையத்துறை ஊழியர்களிடம் அலைபேசிகள் இருக்கும்நிலையில் பல லட்சம் ரூபாய் செலவில் போலீசார்போல் வாக்கிடாக்கி வழங்கபட்டுள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் பலர் அதை அப்படியே போட்டு வைத்துள்ளனர். கோயில் உண்டியல் வருமானங்கள் அதிகாரிகளின் ஆடம்பரத்திற்கு தான் செலவழிக்கபடுகிறதே தவிர பக்தர்களின் நலனுக்கு செலவிடப்படவில்லை என்பது பக்தர்களின் குற்றசாட்டாக உள்ளது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில் போதிய வசதிகள் செய்து தர அறநிலைய துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.வேண்டும் கட்டணமில்லா சேவைகள் அதிகரித்து வரும் ஆன்மிக உணர்வில் இறை பக்தியில் கோயில்களுக்கு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே வருகிறது. நடந்து வருபவர்கள் முதல் ஆடம்பர கார்களில் வருபவர்களும் உள்ளனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்குரிய அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. அதேநேரம் கோயில் வீதிகள் முதல் சன்னதி வரை கட்டணங்கள் வசூலிக்கபடுகிறது. இதனால் பக்தர்கள் மனம் வேதனைபடுகிறது. பக்தர்களுக்கு கட்டணமில்லா சேவைகள் வழங்க அறநிலையத்துறை முன்வரவேண்டும்.-சரவணகார்த்திக், நிர்வாகி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X