பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : பிப் 09, 2020
Share
Advertisement

தேனி தேவதானப்பட்டியில் மதுரைவீரன் கோயில் அருகே இருசமூகத்தினர் தங்களது கொடிமரம், பெயர்பலகைகளை அகற்ற வேண்டும். அங்கு அரசு சார்பில், நிழற்குடை அமைக்க வேண்டும் என பேச்சுவார்த்தையில் முடிவானது. அங்கு நிழற்குடை கட்ட சர்வே எடுக்கும் பணிகள் நடந்துள்ளது. இதற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கோயில் முன் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதற்காக போலீசார் இருவரை கைது செய்தனர். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில் தேவதானப்பட்டி டி.வி.,நகர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் தலைமையில் 70 பேர் , தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். இப்பிரச்னையில் போலீசார் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் புகார் தெரிவித்தனர். மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என அதிகாரிகள் கூறினர். அதை ஏற்றுக்கொண்டனர். சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி.,யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X