பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்பொருளான டிரான்ஸ்பார்மர் மின்தடையால் விவசாயிகள் அவதி

Added : பிப் 09, 2020
Share
Advertisement

பெரியகுளம், பெரியகுளம் பட்டத்திக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வராததால்அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு திணறுகின்றனர்.பெரியகுளம் கீழவடகரை கிராமத்திற்கு உட்பட்ட பட்டத்திகுளம் மற்றும் சச்சுமடை பகுதியில்நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் வயல்கள், தென்னந்தோப்பு, மா மற்றும் கரும்பு தோட்டம் உள்ளது. இந்தப்பகுதியில் விவசாயிகள் தோட்டங்களுக்கு மின்இணைப்பு பெற்றுள்ளனர்.நுாற்றுக்கணக்கான மின்இணைப்பு உள்ளதால் சீராக மின்வினியோகம் செய்யப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பட்டத்திகுளம்,சச்சுமடை விவசாயிகள், மின்துறை அலுவலகத்தில்பல முறை கோரிக்கை வைத்தனர். இதன் பலனாக சில மாதத்திற்கு முன் அந்தப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் மின்சப்ளை செய்யப்படாமல் பயன்பாடின்றி உள்ளது.காற்றுக்கு தென்னை மட்டைகள் மின்கம்பிகளில் விழும் போது, மின்தடை ஏற்படுகிறது.சீராக மின் வினியோகம் இல்லாததால் மின்மோட்டார் காயல் எரிந்தும், அடிக்கடி பியூஸ் போகிறது. இதனால் விவசாயிகள் நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு சிரமப்படுகின்றனர். கோடைகாலம் நெருங்குவதால் தென்னை மரங்களுக்கு அதிகம் நீர் தேவை உள்ளது.எனவே டிரான்ஸ்பார்மரை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவந்து செயற்கையான மின்தடையை தடுக்க மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X