பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் பிங்க் மாரத்தான் டி சர்ட், லோகோ வெளியீடு

Added : பிப் 09, 2020
Advertisement
 சிவகாசியில்  பிங்க் மாரத்தான்  டி சர்ட், லோகோ வெளியீடு

சிவகாசி:சிவகாசியில் மார்ச் 8ல் நடக்கும் ஜே.சி.ஐ., பிங்க் மாரத்தான் போட்டிக்கான டி சர்ட் மற்றும் லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

ஜே.சி.ஐ., சிவகாசி டைனமிக் கடந்தாண்டு பட்டாசு தொழில் சிறக்க ரன் பார் பயர்ஒர்க்ஸ் என்ற மினி மாரத்தான் பள்ளி சிறார்களுக்காக கிடாத்தான் என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முற்றிலும் பெண்களே பங்கு பெறும் பிங்க் மாரத்தான் போட்டி 3 மற்றும் 5 கி.மீ., ஓட்டமாக அடுத்தமாதம் மார்ச் 8ல் நடத்தப்பட உள்ளது.

சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் துவங்கி ரயில்வே பீடர் ரோடு, வேலாயுதம் ரஸ்தா ரோடு வழியாக சென்று மீண்டும் கல்லுாரியில் முடிவடைகிறது. ரூ. 300 அனுமதி கட்டணமாக பெறப்படுகிறது. 16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் பங்கு பெறலாம்.இதற்காக டி.சர்ட் மற்றும் லோகோ வெளியிடும் நிகழ்ச்சியில் தலைவர் கண்ணன் வரவேற்றார். அரசன் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அசோகன் தலைமை வகித்தார். சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார்.

நளினி அசோகன் லோகோ மற்றும் டிசர்ட்டினை வெளியிட காளீஸ்வரி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் மல்லிகா செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இணை செயலாளர் வெங்கடசாமி நன்றி கூறினார்.மாரத்தானில் பங்கு பெற 99524 18857 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.pinkmarathan.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X