பொது செய்தி

தமிழ்நாடு

ஞான சபையில் ஜோதி தரிசனம்

Added : பிப் 09, 2020
Advertisement

புவனகிரி:புவனகிரி அருகே வள்ளலார் பிறந்த மருதுாரில் உள்ள அவரது இல்லத்தில், தை பூச ஜோதி தரிசன விழா நடந்தது.
புவனகிரி தாலுகா, மருதுாரில் வள்ளலார் பிறந்த இல்லத்தில் தை மாத ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நேற்றுமுன் தினம் காலை, கொடி ஏற்ற நிகழ்ச்சி துவங்கியது. நேற்று அகவற்பா முற்றோதல் நிகழ்ச்சியும் அதன் பின் தீபமேற்றி சிறப்பு வழிபாடும் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.சிதம்பரம் சிதம்பரம் விபீஷ்ணபுரத்தில் உள்ள ராமலிங்க சுவாமிகள் சத்திய ஞானசபையில், தைப்பூசத்தையொட்டி ஜோதி தரிசன விழா நடந்தது. இக்கோவிலில் நேற்று காலை 6:00 மணி முதல் ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணி, பகல் 1:00 மணி, இரவு 7:00 மணி, இரவு 10:00 மணிக்கு ஜோதி திரிசனம் நடந்தது. 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X